Tuesday, 29 January 2013

அனைத்தும் உண்மையல்ல


நல்லது நல்லதும் அல்ல.
கெட்டது கெட்டதும் அல்ல
எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும்,
நம்மை அறியாது குறைகள் வந்தாலும்,
நமக்கு நாமே நீக்க வேண்டுமே தவிர
நம்மால் பிறருக்குத் தீங்கு வரக் கூடாது.
நம்மால் பிறரது மனம் உடையக் கூடாது
என்ற இந்த உணர்வுகளை, நமக்குள் வளர்த்தல் வேண்டும்.

ஒவ்வொரு குடும்பத்திலேயும் இதைத் தெளிவாக்கி,
உங்கள் உயிரைக் கடவுளாக்கி,
நல்ல உணர்வை தெய்வமாக்கி,
அதையே குருவாக்கி, உங்கள் வாழ்க்கையில்
பேரின்பப் பெருவாழ்வு வாழும் நிலையைப் பெற்று,
நம் அன்பர்கள் அனைவரும் ஒரு குடும்பம் என்ற நிலைகளில்,
உயர்ந்த பண்புகளை வளர்த்து,
ஒருவரை ஒருவர் நாம் மதித்து நடந்து,
நாம் நம் குருவழியில் வழி நடத்திச் செல்லவும்,
நம் ஒவ்வொரு குடும்பமும் உயர்ந்து வரவும்,
அதற்காக வேண்டி தியானித்து,
அந்தக் குடும்பங்கள் நலம் பெறுவதைக் கண்டு
நாம் மகிழ்ச்சி பெறும் அந்த சக்தி பெற வேண்டும்.

எல்லா வழிகளிலும் நம் அமைப்புகளைப் பார்த்து, எல்லோரும் பொற்றும் நிலையும், அதை அவர்கள் பெற்று, அவர்கள் வாழ்க்கையில் அந்த நலம் பெறும் சக்தியை, நாம் கொடுத்தருள வேண்டும்

No comments:

Post a Comment