Wednesday, 30 January 2013

குருநாதர் கட்டளை


என் குருநாதர் எமக்கு இட்ட கட்டளை

நீங்கள் மகிழ்ந்திருக்கவேண்டும், உங்களையறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும், உங்களின் மகிழ்ச்சியான உணர்வு, மற்றவர்களை மகிழ்ச்சி பெறச் செய்யும் சக்தியாக, மலர வேண்டும், அதைக் கண்டு எனக்குள் மகிழ்ச்சி தோன்ற வேண்டும். நீங்கள் அனைவரும் மெய்யொளி பெறும் தகுதி பெறவேண்டும் என்று ஆசைப்படுகின்றேன், தியானிக்கின்றேன், வேண்டுகின்றேன், பிரார்த்திக்கின்றேன். இது எமது குரு இட்ட கட்டளை
ஞானகுரு

எச்செயலிலும் வெற்றி பெற

அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருணை

எச்செயலிலும் வெற்றி பெற
நீ ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள் ..

நீ செய்யக்கூடிய ஒவ்வொரு செயலும்
  1. மிகுந்த கலை நயத்துடனும் , 
  2. மிக அழகாவும் , 
  3. இனிமேல் யாரும் 
  4. இந்த அளவிற்கு சிறப்பாக செய்ய முடியாத
    அளவிற்கு சிறப்பாக செய்ய வேண்டும் என்று
  5.  உறுதி எடுத்துக்கொள்.
  6. உன்னால் எந்த ஒரு செயலையும் சிறப்பாக செய்ய முடியும் என்று உறுதியாக நம்பு .
  7. இப்படி உறுதியாக எண்ணினால் நீ செய்யும் ஒவ்வொரு செயலும் வெற்றியைத் தேடி தரும்

ஏமாற்று ஜபம்கள்

                                    

                                     கிறிஸ்தவர்கள் தங்கள் மதத்தினால் பலவிஷயங்களில் ஏமாற்றத்திற்கு ஆளாகிறார்கள். அதில் ஒன்றுதான்ஜெபக்கூட்டம். இந்த ஜெபக்கூட்டத்தை நடத்தும் இரண்டு முக்கிய புள்ளிகள் -டி.ஜி.எஸ் தினகரன் மற்றும் நாலுமாவடி மோசரஸ். . . பல இலட்சங்கள்செலவு செய்து பொதுமேடைகளை அமைத்து பிறவிக் குருடனை குணப்படுத்துகிறேன், சப்பானியை நடக்க வைக்கிறேன், செவிடனை கேட்கவைக்கிறேன்என்ற பொய்யான வாக்குறுதிகளை ஜெபத்தின் பெயரால் அரங்கேற்றுகிறார்கள்.இப்படிப்பட்ட  ஜெபத்தினால் உங்கள் பகுதியிலுள்ள ஒரு மாற்றுத்திரணாளியாவது குணமடைந்ததுண்டா? நீங்கள் சுத்தமான இருதய முள்ளவராக இருந்தால் சிந்தித்துப்பாருங்கள் மக்கள் முன் அரங்கேற்றப்படும் ஜெபங்கள் வீண் பகட்டுமேனிக்கு செய்யப்படும் ஜெபங்கள் இல்லையா? ஒருகிருத்தவன் எவ்வாறு ஜெபத்தைஎவ்வாறு மேற்கொள்ளவேண்டும் என்பதை பைபிள்  தெளிவாகசொல்கிறது. .

                                    "இதோ ஒரு சுத்தமானஇருதயமுள்ளவன் கீழ்கண்டவாறுதான் தன் சேனைகளின் கர்த்தரிடம் ஜெபம் பண்ணி முறையிடுவான், நேர்வழியை கேட்பான்!நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப்பலனளிப்பார்"
(மத்தேயு 6:5-6)

                                    இன்றைக்குகிருத்தவர்கள் அனைவரும் கீழ்கண்ட பைபிள் வரிகளுக்கு உகந்தாற்போன்றே ஜெபம் பண்ணுகிறார்கள். காட்டுக் கூச்சலுடன் அல்லேலூயா! அல்லேலூயா!அல்லேலூயா! என்று கூத்தடிப்பது, ஜீஸஸ் காப்பாத்து! ஜீஸஸ் காப்பாத்து!ஓ காட்! ஓ காட்! என்று கும்மாங்குத்து ஸ்டைலில் கொக்கறிக்கிறார்கள் இது அஞ்ஞானமில்லையா? சுத்தமான இருதயமுள்ள கிருத்தவர்களே உங்கள் ஜெபம் இன்றைக்கு அஞ்ஞான வீண் வார்த்தைகளால் அலை பாய்ந்துக்கொள்டிருக்க வில்லையா? இதோ உங்கள் பைபிள் என்னகூறுகிறது என்பதைகவனமாகபடியுங்கள்!

                                    "அன்றியும்நீங்கள் ஜெபம் பண்ணும் போது, அஞ்ஞானிகளைப் போல வீண்வார்த்தைகளை அலப்பாதிங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். 
(மத்தேயு 6:7-8).
ஆன்லைன் ஜெபம்,
                                 24 மணிநேர ஜெபம், தொலைபேசி ஜெபம் ஆகியவற்றில் கண்ணியம்இருக்கிறதா? யாரோ ஒருவன் உங்களுக்காகஜெபிக்கிறானாம் அதற்காகநீங்கள் கூலிகொடுக்கிறீர்கள்.

                                    நீங்கள்செய்த பாவத்திற்கும் உங்கள்குடும்ப கஷ்டங்களுக்கும் யாரோ ஒருவன் ஜெபிப்பானா? இது ஜோசியக் காரனுடைய கதை போன்றல்லவா காணப்படுகிறது.

                                    ஒருவன்ஜோசியக்காரனிடம் சென்று குறிகேட்பானாம் அவன் குறி கூறி சொன்னால்குறைகள்நீங்குமாம். அட முட்டாள் மனிதா அந்த ஜோசியக்காரன் தன் குறைகளைக்காண யாரிடம் போய் குறி கேட்பான்?

தொலைபேசி ஜெபம்!

தொலைபேசியில்ஜெபம் செய்கிறோம் என்கிறார்கள் இவர்கள் இதற்கு கட்டணமாக ஜெப
ஊழியங்களுக்குகாணிக்கை செலுத்துங்கள் என்று கவர்ச்சிகரமாக பேசி ஒரு கணிசமானபணத்தை கரைக்கிறார்கள். இதுமட்டுமா?

                                    குரூப்ஆசீர்வாத திட்டம், குடும்ப ஆசிர்வாத திட்டம், குழந்தைகள் ஆசிர்வாத திட்டம், கணவன் மனைவி ஆசிர்வாத திட்டம், சக்காளத்திஆசிர்வாத திட்டம் என்று கூறிஒவ்வொரு திட்டத்திற்கும் இவ்வளவு தொகை செலுத்தினால் உங்களுக்காகஇரவுபகலாக அயராது ஜெபிக்கிறோம் அடேயப்பா எத்தனை ஏமாற்று திட்டங்கள்.இப்படி திட்டங்களில் சேர்ந்து ஜெபித்துக் கொண்டால்தான் தேவன் கருணைகாட்டுவானா? ஏன் தேவன் என்ன உங்கள் சொந்த குரலை கேட்காத செவிடனா?

                                    உங்கள்குடும்ப கஷ்டத்தை பார்க்காத குருடனா?
இன்றைக்கு தொலைபேசி ஜெபம், நாளை கைபேசி ஜெபம் மறுநாள் டி.வி.ஜெபம், வீட்டுல எழவு விழுந்துவிட்டால் ஒப்பாரி ஜெபம் என்று ஜெபத்தை நாசப்படுத்தியவர்கள்அந்த தேவனிடம் தன்மானத்தை இழந்த மானங்கெட்ட பாதரியார்கள்.

பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம். (நீதிமொழிகள் 12 : 22 )

                                    சிந்தித்துப்பாருங்கள்சகோதர சகோதரிகளே! அட்லீஸ்டு 1 ரூபா கொடுத்தாதான் உங்களுக்காக இந்த பொய்உதடுகள் கொண்ட மதகுருமார்கள் ஜெபிப்பார்கள் பணம் இல்லைன்னா உங்க பெயரை தேவன் கிட்ட சொல்லுவாங்களா? அப்படி பணம்கொடுத்தால்தான் தேவன் பிரார்த்தனையை ஏற்பானா?இது தேவன்மீது இட்டுக்கட்டியது ரோமில்லையா? எனவே ஆன்லைன் ஜெபம், 24 மணிநேர ஜெபம், தொலைபேசிஜெபம் என்று கூறுகிறார்களே இதுவெல்லாம் சுத்த மோசடி.

                                    விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான், மூடனோ தன் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான். (நீதிமொழிகள் 13:16) 

பட்டினத்தார்

கட்டியணைத்திடும் பெண்டிரு மக்களுங் காலத்தச்சன்
வெட்டிமுறிக்கு மரம்போற் சரீரத்தை வீழ்த்திவிட்டாற்
கொட்டிமுழக்கி யழுவார்; மயானங் குறுகியப்பால்
எட்டி யடிவைப்ப ரோ? யிறைவா ! கச்சியேகம்பனே.

விளக்கம் :

கட்டி அணைத்த மனைவியும் , பெற்ற பிள்ளைகளும் ,,

தச்சன் மரத்தை வெட்டி வீழ்த்துவது போல்

எமன் இந்த உடலில் இருந்து உயிரை எடுத்து விட்டால்

மனைவி , பிள்ளைகள் , சுற்றத்தார் அனைவரும்

கொட்டு மேளம் எல்லாம் அடித்து அழுது புலம்பி

மயானம் வருவர், அடுத்து பாதைக்கு எட்டி அடி

வைப்போரே இறைவா ! கச்சியேகம்பனே

தியானம் செய்யும் முறை

தியானத்தை துவங்க


உடல் தூய்மைஉடல், கை, கால், முகம் அலம்பி தியானத்தை துவங்க வேண்டும்

வயிறு காலியாக இருக்க வேண்டும்
உகந்த நேரம் சந்தியா வேளை – காலை, மாலை
உகந்த இடம்காற்றோட்டமான அமைதியான சூழல்
ஆசனம்சுகாசனம் அல்லது, அர்த்த பத்மாசனம், சித்தாசனம் அல்லது வஜ்ராசனம்


பத்மாசனம்
                                                           

முத்திரைசேஷ்டா முத்திரை அல்லது சின் முத்திரை

யோகம் சகஜ யோகம் – தசைகளை தளர்த்தி நாம் விரும்பியபடி அமர்தல்

உடல் நிலைதலை, கழுத்து, முதுகு மூன்றும் ஒரே நேர் கோட்டில் இருக்க
வேண்டும்.

முதுகு நிமிர்ந்து உட்கார வேண்டும்.

திசைதெற்கு திசை நோக்கி அமர வேண்டும்

வாய்அங் என்று சொல்லி நாக்கால் அன்னத்தைத் தொட்டு உதடுகளை லேசாக மூடுங்கள்
கண்கள்கண்களை புருவ மத்தியை நோக்கி இயல்பாகக் குவியுங்கள்

(புருவ மத்தியில் ஆன்மா உள்ளது. தியானத்தின் பக்குவ நிலையில் ஆன்ம ஒளி ஜோதியாகத் தெரியும்.)

மனநிலை எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என வாழ்த்துங்கள்

எண்ணக் குவிப்பு ஞான தீபம் நம் புருவ மத்தியில் இருப்பதாக பாவித்து வேறு
நினைப்பின்றி மனதால் அதைத் துதியுங்கள்

எண்ணங்கள் பின் செல்ல வேண்டாம்

நம் எண்ணங்கள் அங்கும் இங்கும் ஓடும்.

கவலை வேண்டாம். கஷ்டப்பட்டு எண்ணங்களை கட்டுப்படுத்த வேண்டாம்.

மனம் அலைந்தால் நீண்ட ஒரு பெருமூச்சு விட்டு,

பிறகு தியானத்தை தொடருங்கள்.

எண்ணங்கள் தானே திரும்பி வரும்.

மூச்சுமூச்சு இயல்பாக விடுங்கள்

தியான காலம்ஆரம்பத்தில்

தியான நேரத்தை 5 நிமிடங்கள்,

பின் 10 நிமிடங்கள்,

பின் 15, நிமிடங்கள்,

பின் 30 நிமிடங்கள்

எனப்படிப்படியாகக் கூட்டுங்கள்.

ஒருமாத காலம் இத்தியானத்தை தொடர்ந்து செய்தால்

ஒரு இனம் தெரியாத மன மகிழ்ச்சி,

மனநிறைவு, மன நிம்மதி, அபரிமிதமான மன ஆற்றல்

எல்லாவற்றையும் விட ஒரு புது மனிதராக நாம் மாறியிருப்பதை உணர்வீர்கள்.

வாழ்க்கையில் தியானம் ஒரு மறு பிறப்பு.

வாழ்க்கையில் நமது ஒவ்வொரு செயலும்,

தியானத்தின் பின் அர்த்தம் உள்ளதாக, ஆனந்தம் தருவதாகத் தெரியும்.

“கண்களிக்கப் புகை சிறிதும் காட்டாதே புருவக்கலை நடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கே” - என்கிறார் வள்ளலார்

ஆகையால் தியானம் செய்யுங்கள் ..