சுத்தவெளி
சுத்த வெளியில் இருந்து திணிவு திணிவு உருண்டு முதலில் அணு என்று பெயரை
எடுத்து, பிறகு பேரண்டத்திற்க்குள் வந்து அதை சுழ்ந்து அழுத்தும்
காரணத்தினால் அணு வேகமாக சுழன்று அணுக்கள் கூடி? அது மற்ற அணுக்களோடு
இணைந்து அதன் சுழல் வேகத்திற்கு தக்கவாறு பௌதிகமாகி, முதல் பூதம் என்ற
விண், பின்பு காற்று, பின்பு நெருப்பு, பின்பு நீர், பின்பு கெட்டி பொருளாக
அதன் வேகத்திற்கு தக்கபடி பஞ்சபூதமாகி இதன் விகிதாசாரத்திற்க்கும் ஏற்ப
உயிர்களாகி, அறிந்து கொள்ளும் சக்தியை பெற்று ஓர் அறிவை பெற்று, அதை
அறியும் வகையுள்ள உறுப்பையும் பெற்ற உயிரினமாகி, முறையே ஒன்று முதல் ஐந்து
வித அறிவையும், உறுப்பையும் பெற்ற உயிரினணுக்களாகி பின்பு நுட்பமான
அறிவையும், உடல் அமைப்பையும், அழகான தோற்றத்தையும் பெற்ற மனிதனாகி, அதன்
பிறகு ஐந்தின் அறிவை கொண்டு முதிர்ந்து தெளிந்த பின்பு ஆறாவது பகுத்தறிவை
பெற்று வாழ்கின்ற மனிதன் உயிர் இனங்களிலேயே உயர்ந்த நிலையில் வாழும்
இனமாகும். மனிதர்க்கு மனிதர் உடல் தோற்றமும், உறுப்புகளின் தோற்றமும் ஒன்று
போல் தெரிந்தாலும், கூட மனத்தோற்றத்தில் ஒருவருக்கு ஒருவர்
பல்லாயரக்கணக்கில் வேறுபடுகின்றனர்.
ஆகவே முதல் பூதமான விண்,
கண்களுக்கும் கருவிகளுக்கும் தெரியாமல் சுழன்று கொண்டிருக்கின்றன. இதை
ஆன்மீகவாதிகள் ஞானத்தால் உணர்ந்து கூறுகின்றனர். இதை பரமாத்மா என்று
கூறுகிறார்கள்.
இரண்டாவது பூதமான காற்றை அளக்க முடியும். வகையை அறியும் தன்மை விஞ்ஞானிகளால் சொல்ல முடியவில்லை. காரணம் அதற்கு கருவிகள் இல்லை.
முன்றாவது பூதமான நெருப்பை உடலில் உள்ள போது கருவிகளின் துணை கொண்டு அளக்க
முடியும். சூடு தோன்றிய காரணம், அதன் தன்மையை விஞ்ஞானிகளோ, மருத்துவர்களோ
கூறமுடியாது. காரணம் அதற்கும் கருவிகள் இல்லை.
நான்காவது பூதமான
நீர் தத்துவத்தை உடலில் இருக்கும் போது நிறத்தையும், அதன் தரத்தையும் சோதனை
கருவிகளின் மூலம் அறிய முடியும். ஆனால் மு்லத்தை அறிய முடியாது. காரணம்
கருவிகள் இல்லை.
ஐந்தாவது பூதமான கெட்டி பொருளான மண் தத்துவம்
உடல் உறுப்புகளாக, உடற்பகுதிகளாக, தோற்றணுக்களாக, உட்பல பிரிவுகளாக, கோடான
கோடி சிற்று உடம்புகளை (திசுக்கள் or அணுக்கள்) கண்ணாலும், பெரிதுபடுத்தும்
கருவிகளாலும் காண முடிகிறது. குறிப்பிட்ட தொல்லை (தடை) நோய்க்கு பிறகு
உடலின் உறுப்புகள் பெருத்து விடுவதும், சிறுத்து விடுவதும், தேய்ந்து
விடுதல், கரைந்து விடுதல் போன்ற உறுப்பின் தோற்றத்தையும், இரத்தம், பித்தம்
போன்ற உடலின் எல்லா வகை நீர் பொருட்களையும் மற்றும் தொற்று உடம்பு என்று
அழைக்கப்படும் பாக்டீரியா வைரஸ போன்ற நுண் உடம்புகளின் எல்லாவித
தோற்றணுக்களையும், நுண் கருவிகளின் மூலம் காண முடியும். மற்ற வகை
பூதங்களில் தொற்று ஏற்பட்டுவிட்டால் மருத்துவரின் உதவிகருவிகள் மூலம்
கண்டறிய முடியாது. ஆனால் மனித மனத்தாலும் பார்த்தும், கேட்டும்,
சொல்லியும், ஆராய்ந்தும் தான் கண்டு கொள்ள முடியும். ஆகவே முதல் இரண்டு
பூதங்களுக்கு கருவிகளோ எப்போதும் கண்டுபிடிக்க முடியாது. காரணம் கருவிகள்
வெப்ப,திரவ, கெட்டி பொருட்களால் செய்யப்படுவதால் விண், காற்று ஆகியவற்றின்
அளவை காணலாம. தரத்தையும்,மூலத்தையும் அறிய முடியாது. அணுவை அறிய முடியும்.
பரம அணுவை அதன் எண்ணிக்கையை விஞ்ஞானிகளால் இன்னும் சொல்ல முடியவில்லை.
ஞானிகளால்தான் அதன் தன்மையை கூற முடிகிறது.
பிறப்பை பற்றி ஒளவையார் கூறுவதாவது:-
“பரமாய சக்தியுள் பஞ்சமா பூதம் தரம்
மாறி தோன்றலே பிறப்பு” என்கிறார்.
ஆகவே விண்ணை பற்றிதான் எல்லா ஞானிகளாலும் கூற முடிகிறது.
ஆகவே பிறவிகளிலே உயர்ந்தது மனித பிறவி. அது செய்கின்ற செயல் திறனுக்கு
ஏற்ப அது பண்பாட்டை பெறுகிறது. மனிதருள் பல வகையான தொழில் செய்து வாழ்ந்து
வந்தாலும் அவற்றுள் மருத்துவம் செய்யும் தொழிலே சிறப்பானதாக
கருதப்படுகிறது. உலகிலே தற்போது மருத்துவ வகை ஆயிரம் இருந்தாலும் அதில் 32
வகையான மருத்துவங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அதிலும் ஐந்து வகை
நடைமுறையில் அதிகமாக காணப்படுகின்றன.
1.சித்தா 2.ஆயூர்வேதம் 3.யுனானி 4.அலோபதி 5.ஹோமியோபதி. என்ற ஐந்தாகும்.
இதிலும் அலோபதியும் ஹோமியோபதியும் நேர் எதிரான கருத்துக்களை கொண்டதாகும்.
இன்று உலகெல்லாம் பரவி இருக்கும் அலோபதி மருத்துவம் தோன்றி 2300 ஆண்டுகள்
ஆகின்றது. (அதனை கண்ட) அலோபதி மருத்துவ தந்தை ஹிப்போகிராட்டி பிறந்து 2300
ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இருப்பினும் 200 ஆண்டுகளுக்கு முன்பே அதன்
கொடுமையும், கடுமையும் தோன்றி அது மனித மனதை மயக்கி கொண்டு வியாதிகளை
தற்சாந்தியே செய்து கொண்டும், அழுத்தி கொண்டும் மறைத்துக் கொண்டும்
இருக்கிறது என்பதை அதே துறையில் (அலோபதி) தோன்றி உலக புகழ்பெற்ற ஆஙகில
மருத்துவரும் 12 மொழி கற்று வல்லவரான Dr.சாமுவேல் ஹானிமேன் (ஜெர்மனி)
அவர்கள் கூறினார். அவர் மனச்சாட்சிக்கு மதிப்பு அளித்து மனிதர்க்கு
செய்கின்ற மருத்துவம் குணம் செய்யும் தத்துவம் இது அல்ல என்று கூறி அதுவரை
பெற்ற பல வித பட்டஙகளையும் 30 வயதிலேயே துறந்து விட்டு, நோயை எப்படி குணம்
செய்வது என்று கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, அதற்கு தடையாக
இருந்த பொருள், புகழ், அதிகாரம், ஐம்புலனிம்பம் என்ற மாயையிலிருந்து
மீண்டார். பின்பு நோயை குணம் செய்யவது எப்படி? என்ற ஒரே நோக்கோடு
புறப்பட்டார். முன்பே ஆராய்ச்சிகள் பல செய்து M.D.,பட்டம், தலைமை
மருத்துவர் பட்டம் ஆஙகில மருந்துகள் பல கண்டுபிடித்து நூல்களும்
எழுதியிருந்தார். இதன் துணை கொண்டு அறிந்தார். இனி ஆங்கில மருத்துவத்தின்
மூலம் உயிரினங்களுக்கு நிரந்த குணம் அளித்து நன்மை செய்ய முடியாது என்று
அது வரை பெற்ற பட்டம், பதவி, செல்வங்களையும் துறந்துவிட்டு உயிரினங்களுக்கு
உண்மையான மருத்துவத்தை கண்டுபிடிக்க வேண்டுமென்று பல ஆராய்ச்சிகள் செய்து
மனிதனாக பிறக்க வைத்த கடவுளுக்கு மனிதனாகவும், உண்மை மருத்துவராகவும்
இருக்க வேண்டுமென்று எண்ணி அறிய பெரிய முயற்சிகளையும் செய்து பல நூறு
இடையூறுகளுக்கு பிறகு சுமார் 55 ஆண்டுகளுக்கு பிறகு ஹோமியோபதி என்ற
மருத்துவம் கண்டார். உயிரினங்கள் படும் வேதனையை தீர்க்கும் கலை என்று
இதற்கு பொருள்படும். நோய் என்றால் என்ன, நாள்பட்டதும், தீடீர்வகை நோய்
என்றால் என்ன என்பதை பற்றியும் மருந்துகளின் குணத்தை பற்றியும், ஹோமியோபதி
தத்துவம் மருத்துவர்களுக்கு மேலும் பலவகையான அதி நுட்பமான செய்திகளையும்,
அறிவுரைகளையும் ஹானிமேன் அவர்கள் ஆர்கனான் ஆப் மெடிசனில் 6வது பதிப்பு என்ற
இந்நூலில் நோயை கண்டு தக்க மருந்து தருவது எப்படி என்று 291 சுலோகங்களில்
மிக மிக தெளிவாக, விளக்கமாக, விரிவாக கூறிவிட்டார்.
No comments:
Post a Comment